மது குடிக்க வீட்டில் பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

திருமயம், ஜூன் 11: திருமயம் அருகே மது குடிக்க பணம் தராததால் வாலிபர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெள்ளாளர் கோட்டையூர் கிராமத்து சேர்ந்தவர் அழகு மகன் கார்த்திக் (24). இவர் ஐடிஐ வரை படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வீட்டில் பெற்றோர், கார்த்திக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 3ம் தேதி கார்த்தி பெற்றோரிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் கார்த்திக்கின் பெற்றோர் பணம் தர மறுத்ததால் மனம் உடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் கார்த்திக்கை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திக் 60 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கார்த்திக்கின் தாய் மீனாள் திருமயம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: