பெரம்பலூர் அருகே விபத்து கார்-வேன் மோதல்

பெரம்பலூர்,ஜூன்11: பெரம்பலூர் அருகே கார், வேன் மோதிக்கொண்ட விபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் காயமடைந்தார்.பெரம்பலூர், கலெக்டர் அலுவலக சாலையில், அபி ராமபுரத்தில் வசித்து வரு பவர் தங்கவேல் மகன் தமிழ்ச் செல்வன்(47) வழக் கறிஞராக உள்ள இவர் இந் திய தேசிய காங்கிரஸ் கட் சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளராக உள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பெரம்பலூர் அரியலூர் தேசிய நெ டுஞ்சாலையில், பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி நேற்று 10ம்தேதி தனது காரை ஓட்டிச்சென்ற தமிழ்ச்செல்வன், பகல் 1:30 மணியளவில் கவுள்பாளை யம் பேரளி இடையேயுள்ள தனியார் பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந் தார். அப்போது, எதிரே தஞ்சை மாவட்டம், திருத்துறை ப் பூண்டி, முத்துப்பேட்டையைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுரேஷ்(39) என்பவர் ஓட்டி வந்த. டூரிஸ்ட் வேன் மீது மோதி விபத்து க்குள்ளானது.இதில் காங்கிரஸ் கட்சியி ன் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வனுக்கு முகம் மற்றும் காலில் காயம் ஏற்பட்டு திரு ச்சி தனியார் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.டூரிஸ்ட் வேன் டிரைவர் சுரேஷ் என்பவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற் று வருகிறார். விபத்து குறி த்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: