கீழ்வேளூரில் எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம்

கீழ்வேளூர், ஜூன் 11: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், பிரதாபராமபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் பங்கேற்று பயிற்சியை துவங்கி வைத்தார். தொடர்ந்து குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் பார்வையிட்டார். பள்ளி கோடை விடுமுறை நாட்களிலும் ஐந்து நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஆர்வத்துடன் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளி மாணவர்கள் விரும்பி கல்வி கற்க ஏதுவான துணை உபகரண பொருட்களை உருவாக்கினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் பாடல் கதை படைப்பாற்றல் கைவண்ணம், பொம்மலாட்டம் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் எவ்வாறு கட்டளை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இப்பயிற்சிக்கு கீழையூர் வட்டார கல்வி அலுவலர்கள் லீனஸ், ராமலிங்கம், கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் மாட்டின் பாக்யராஜ உள்ளிட்ேடார் கலந்து ெகாண்டனர்.

Related Stories: