சமூக வலைதளங்களில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

நெல்லை, ஜூன் 11: கூடங்குளம் அருகே உள்ள கூத்தன்குழியை சேர்ந்த அந்ேதாணி வளனரசி மகன் சிலுவை ஆன்ரோ அபினேஷ். இவரை கடந்தாண்டு கூத்தன்குழியை சேர்ந்த நிக்கோலஸ் ரபிஸ்டன் (21) கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நிக்கோலஸ் ரபிஸ்டன், அரிவாளை காட்டி மிரட்டும் விதமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இதனையறிந்த அந்தோணி வளனரசி (47) சம்பந்தப்பட்ட வீடியோ, தனது குடும்பத்தினரை அச்சுறுத்தும் விதமாக உள்ளதாக கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்கு பதிந்து நிக்கோலஸ் ரபிஸ்டனை கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தார். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: