பாளையில் புதுவாழ்வு பெருவிழா

நெல்லை, ஜூன் 11: நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள துதியின் கோட்டை ஊழியங்கள் சார்பில் கடந்த 8ம் தேதி முதல் புதுவாழ்வு பெருவிழா நடந்து வருகிறது. 4ம் நாளான இன்று(11ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெதஸ்தா உபவாச ஜெபம், துதியின் கோட்டை ஆலயத்தில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் புதுவாழ்வு பெருவிழா நடக்கிறது. சென்னை இயேசு அழைக்கிறார் பால்தினகரன் சிறப்பு தேவசெய்தி அளிக்கிறார். ஸ்டெல்லா தினகரன், சாமுவேல் தினகரன் ஆகியோர் செய்தி அளிக்கின்றனர். துதியின் கோட்டை தலைமை போதகர் ரத்தினம்பால் தலைமை வகிக்கிறார். இணை போதகர் நிக்ஸன் பால் வெஸ்லி முன்னிலை வகிக்கிறார். பாஸ்டர் பீட்டர்சன் பால் தலைமையில் பாடல் மற்றும் ஆராதனை நடக்கிறது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து நாளையும் புதுவாழ்வு பெருவிழா கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: