மளிகை கடைக்காரர் மயங்கி விழுந்து சாவு கேடிசி நகர்,

ஜூன் 11: வி.எம்.சத்திரம் சுந்தரர் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஐயப்பன் (35), மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் விடுமுறைக்காக ராமானுஜம்புதூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று காலையில் ஐயப்பன் நீண்டநேரமாக கடையை திறக்கவில்லை. இதனால் அப்பகுதியிலிருந்த அவரது உறவினர்கள், ஐயப்பன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் ஐயப்பன் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஐயப்பன் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: