தகராறில் தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

கடலூர், ஜூன் 11: கடலூர் முதுநகர் அருகே உள்ள சுத்துகுளம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மகாமணி மகன் வாசு (32). கிரிக்கெட் விளையாட்டின் போது பிரச்னை ஏற்பட்டு இவருக்கும் சான்றோர்பாளையம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பிள்ளையார் கோயில் அருகே வாசு நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை மற்றும் அவரது நண்பர்களான சதீஷ், திவாகர், வசந்தராஜ், சக்திவேல், தினேஷ், மணி ஆகியோர் வாசுவை ஆபாசமாக பேசி, தடியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: