மரக்கன்று நடும் விழா

கம்மாபுரம், ஜூன் 11: உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி, கம்மாபுரம் ஒன்றிய 43 ஊராட்சிகளில் தலா 160 மரக்கன்றுகள் மற்றும் முருங்கை நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் 150 மரக்கன்றுகள் மற்றும் 10 முருங்கை கன்றுகள் நடவு செய்யும் பணியை ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் வளர்மதி ராஜசேகர் துவக்கி வைத்தார். இளநிலை உதவியாளர் சந்துரு, ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், பணித்தளப் பொறுப்பாளர்கள் சண்முகம், கோமதி, மலர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: