கடலூர் சாவடியில் கிருபாலலித் ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கடலூர், ஜூன் 11: கடலூர் சாவடியில் புதிதாக கிருபாலலித்ஈஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி முதல் கால யாக பூஜை, அங்குரார்பணம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால பூஜை, நடைபெற்று யாக சாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் அடங்கிய கலசத்தை ஊர்வலமாக மங்கள வாத்தியத்துடன் கொண்டு சென்றனர். பின்னர் வேதமந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் புனித நீர் மற்றும் மஞ்சள் கலந்த நீரை பொதுமக்கள் மீது தெளித்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஐயப்பன் எம்எல்ஏ, லீமா ஐயப்பன், தொழிலதிபர் உமாசந்திரன், காயத்ரி உமா சந்திரன், டாக்டர் சீனிவாசராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், சரத் தினகரன், ஆராமுது, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ராமலிங்கம், தினகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், சித்ராலயா ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமாரசாமி, மனோகர், பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி கோவலன், லைன் ராமு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: