நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

நாமகிரிப்பேட்டை, ஜூன் 11: நாமகிரிப்பேட்டை அருகே 7ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமகிரிப்பேட்டை அருகே தேவஸ்தானம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராதா. இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், இதில் மூத்த மகன் கனிஷ்கர்(13). அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான். நேற்று வீட்டில் உள்ள செல்போன் சார்ஜ் வயரை கட் செய்து கனிஷ்கர் விளையாடிக்கொண்டிருந்தான். இதனை அவரது தாய் கண்டித்து விட்டு, ஆடு மேய்க்க வெளியில் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் எலக்ட்ரிக்கல் வயரால் கனிஷ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்த அருகில் வசிப்பவர்கள், அவனை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கனிஷ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: