திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் உறுதி மொழி ஏற்பு

திருச்செங்கோடு, ஜூன் 11: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். இதில் நகராட்சி ஆணையாளர் கணேசன் குழந்தைகள் நல துணை ஆய்வாளர் மோகன் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் கணேசன் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும், நகராட்சி பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பேசும்போது, நகராட்சி எல்லைக்குள் குழந்தை தொழிலாளர் இல்லை என்ற  நிலையை உருவாக்க, நகர் மன்ற உறுப்பினர்ரகள், நகராட்சி பணியாளர்கள் துணை  நிற்வேண்டும் என்றார். ...

Related Stories: