சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு

வேப்பனஹள்ளி ஜூன் 11: வேப்பனஹள்ளி ஒன்றியம், நாச்சிக்குப்பம் ஊராட்சியில் நாச்சிக்குப்பம் கூட்டுரோட்டில் பிரதம மந்திரி கனிக்ஷேத்ரா கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ₹7.5 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கடவரப்பள்ளி மற்றும் நந்தகொண்டப்பள்ளி கிராமங்களில் தலா ₹9 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையங்களையும், கிருஷ்ணகிரி செல்லக்குமார் எம்.பி., திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா நாகராஜ், காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நல்லூர் கல்யாணி, ஜேசுதுரை, முபாரக், லோகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, துணை பிடிஓ நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: