குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 11: ராயக்கோட்டை போலீசார் சஜ்ஜல்பட்டியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டதில், அந்த கடையில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் திருப்பதி(45) என்பவரை கைது செய்தனர். அதே பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற கோவிந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், உல்லுக்குறுக்கி பகுதியில் ரோந்து சென்றபோது வாஜித்(26) என்பவரின் பெட்டிக்கடையில், குட்காவை பறிமுதல் செய்த போலீசார், வாஜித்தை கைது செய்தனர்.

Related Stories: