வல்லநாட்டில் சுகாதார ஆய்வு கூட்டம்

செய்துங்கநல்லூர், ஜூன் 9: வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வட்டார அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் தலைமை வகித்தார். மக்களை  தேடி மருத்துவம் ஒருங்கிணைப்பாளர் சுருதி, மாவட்ட நுண்ணியல் நிபுணர்  வர்ஷா, உதவி திட்ட அலுவலர் கனியம்மாள் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி வரவேற்றார். துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், நலக்கல்வியாளர் அந்தோணிசாமி ஆகியோர் திட்ட விளக்கவுரை ஆற்றினர். நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி, கண்காணிப்பாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் அலுவலக ஆய்வு பணி மேற்கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சாஹிர் நன்றி கூறினார். கூட்டத்தில் வல்லநாடு, கருங்குளம், கீழசெக்காரக்குடி,  சிங்கத்தாகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ  அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஆய்வக  நுட்பனர்கள், ஆற்றுப்படுத்துநர், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர், கண்  மருத்துவ உதவியாளர், இடைநிலை சுகாதார பணியாளர்கள் மற்றும் அலுவலக  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: