பாளையில் பள்ளி பூட்டை உடைத்து பணம் திருட்டு

கேடிசி நகர், ஜூன் 9:  பாளை டக்கரம்மாள்புரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள், அலுவலக பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த முதல்வர் உமா, இதுகுறித்து தெரியவந்ததும் பாளை பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: