ரூ.1 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

விருதுநகர், ஜூன் 9: விருதுநகர் அருகே பெரியவாடியூரில் வச்சக்காரப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது இரு பைக்குகளில் வந்த முனீஸ்வரன்(41), சந்தனகுமார்(26) இவரையும் வழிமறித்து விசாரணை செய்தனர். விசாரணையில் விருதுநகரை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் இருந்து மொத்தமாக புகையிலை, குட்கா வாங்கி சிறிய கடைகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்த தகவலின் பேரில் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கடையில் இருந்து 78 கிலோ எடையிலான ரூ.48,702 மதிப்பிலான புகையிலை, குட்காவை பறிமுதல் செய்தனர். மொத்த வியாபாரி விருதுநகரை சேர்ந்த ஜோசப்பை தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருப்புக்கோட்டை ரோடு 116 காலனி சந்திப்பில் கிழக்கு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். சோதனையில் பாத்திமாநகரை சேர்ந்த சேசுராஜ்(36), அல்லம்பட்டி கமலக்கண்ணன்(36) இருவரும் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்தனர். காரில் நடத்திய சோதனையில் அட்டை பெட்டிகளில் அரசு தடை செய்த ரூ.33,750 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகள், ரூ.17,820 மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. இருவரையும் கைது செய்து ரூ.51,570 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: