உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி விளையாட்டு விழா

உத்தமபாளையம், ஜூன் 9 உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் 66வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன் தலைமை வகிக்க, மேலாண்மை இயக்குனர் செந்தல் மீரான் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முகமது மீரான் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் அக்பர் அலி, விளையாட்டு துறை மாணவர்களின் சாதனை அறிக்கையை வாசித்தார்.இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தேசிய- சர்வதேச அளவிலான பாரா அதெலடிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவரும், 2020ம் ஆண்டில் தேசிய அளவிலான சிறந்த விளையாட்டு வீரருக்கான மத்திய அரசின் தயான் சந்த் விருது மற்றும் மாநில அரசால் சிறந்த பயிற்சியாளர் விருது பெற்றவருமான தடகள விளையாட்டு வீரர் ரஞ்சித் குமார் கல்லூரியில் மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு இடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் அவர், மாணவர்களின் மத்தியில் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக தனது

விளையாட்டு பயணத்தின் முயற்சிகளையும் வெற்றிகளையும் எடுத்துரைத்து விளையாட்டில் சாதிப்பதற்கு வயது மற்றும் உடல் குறைபாடுகள் எதுவும் முக்கியமானது அல்ல என பேசினார். இதில் ஆட்சி குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: