இன்று மின்சாரம் நிறுத்தும் பகுதிகள்

ராமநாதபுரம், ஜூன் 9:  தேவிபட்டினம், பனைக்குளம், இதம்பாடல், மின் பாதைகளில் இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்கே நகர், எம்ஜிஆர் நகர், ரமலான் நகர், இளமனூர், மேலக்கோட்டை, மாடக்கொட்டான், தில்லைநாயகி புரம், பனைக்குளம், அழகன்குளம், புதுவலசை, தேர்போகி, அத்தியூத்து, இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், நல்லிருக்கை, மல்லல், வளநாடு, மட்டியரேந்தல், இளங்காக்கூர், ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தப்படுகிறது. இதனை ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், நகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: