கிரிக்கெட் போட்டியில் பரிசு

சிவகங்கை, ஜூன் 9:  சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகரில் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பரிசுகளுக்குமான நினைவு கோப்பைகளை திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் வழங்கினார். நற்பணி மன்ற தலைவர் நவீன்குமார், முன்னாள் நிர்வாகி அன்பழகன் மற்றும் பரிசளித்தோர், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: