கோயில் திருவிழாவில் எருதுகட்டு

சாயல்குடி, ஜூன் 9:  முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் கோயில் திருவிழாவையொட்டி எருதுகட்டு நடந்தது. முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் அரியநாயகியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா மற்றும் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை நடந்தது. நேற்று காலையில் சாமி சிலைகள், தவளும் பிள்ளை உருவங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து எருதுகட்டு நடத்தப்பட்டது. தேனி, மதுரை, விருதுநகர். சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். முதுகுளத்தூர் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு எருதுகட்டு  நடத்தப்பட்டதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வந்து பார்த்து ரசித்தனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

Related Stories: