பழநியை சேர்ந்த 4 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.2.10 லட்சம் மோசடி

திண்டுக்கல், ஜூன் 9:  இணையதளத்தில் பொருட்களை வாங்க, விற்க பல ஆப்கள் பயன்பாட்டில் இருக்கிறது. அதில் ஒரு ஆப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நபர், ராணுவ அதிகாரியாக பணிபுரிவது போல புகைப்படத்துடன் போலி முகவரியுடன் கணக்கு துவங்கியுள்ளார். அதில் பயன்படுத்திய டூவிலர், கார் போன்றவற்றை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி போஸ்ட் பதிவிட்டுள்ளார். இதனை நம்பிய பழநியை சேர்ந்த 4 பேர் குறுஞ்செய்தி மூலம் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் வெவ்வேறு காரணங்களை கூறி ரூ.2.10 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால் அவர்களுக்கு வாகனங்களை பெறுவதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சந்ேதகமடைந்த 4 பேரும், அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த 4 பேரும் இதுகுறித்து திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரேகா உள்ளிட்ட ேபாலீசார் வழக்குப்பதிந்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: