வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

திருப்பூர், ஜூன் 9: மங்கலம் அடுத்த கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (20). இட்லி, தோசை மாவு விற்பனை செய்து வருகிறார். அதேபோல் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுகுமாரன் (27), குமரவேல் (22), கருப்புசாமி(24) ஆகியோரும் மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இட்லி, தோசை மாவு விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கிடையே தோசை மாவு விற்பனை செய்வது தொடர்பாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிரவீனை கணபதிபாளையம் ரேஷன் கடை அருகே சுகுமாரன், குமரவேல், கருப்புசாமி ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில் பிரவீன் பலத்த காயமடைந்துள்ளார். இது தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து சுகுமாரன், குமாரவேலு, கருப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: