சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் விஜயாபுரம் காசிபாளையத்தை சேர்ந்தவர் சாரதி (19). இவர் 12 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி  பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் சாரதியை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நீதிபதி நாகராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சாரதிக்கு 5 ஆண்டு சிறையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலாபானு ஆஜரானார்.உடுமலை போக்குவரத்து எஸ்.ஐ சாலை விபத்தில் பலிஉடுமலை, ஜூன் 9:  உடுமலையில் கடந்த ஓராண்டாக போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி (43). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை சென்றார். நேற்று காரில் உடுமலை நோக்கி திரும்பி கொண்டிருந்ததார். மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் ஈசிஆர் சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்தவர் பலத்த காயமடைந்தார்.இதை தொடர்ந்து போலீசார், குருமூர்த்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உடுமலையில் பணியாற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக போலீசார் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: