முதலமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஊட்டி, ஜூன் 9: ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 விளையாட்டு வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகள், விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்க பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகள் விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமர்பிக்க வேண்டும். இது தவிர விளையாட்டு போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், நிர்வாகி, ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றம் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடை அளித்தவர்), ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு விருது வழங்கப்படுறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய 2 வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். இத்திட்டத்தின் கீழ் 2021-22ம் ஆண்டிற்கான (01.04.2018 முதல் 31.03.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை -600003 என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் வந்து சேரம்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: