நம்பியூர் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நீதி கேட்டு நடைபயணம்

கோபி, ஜூன் 9:  நம்பியூர்  வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் நீதி  கேட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  முதல் நம்பியூர் பஸ் நிலையம் வரை  நடைபயணம் மேற்கொண்டனர். மாவட்ட  தலைவர் ராஜன் தலைமை தலைமை தாங்கினார்.  மாவட்ட  செயலாளர்கள் கண்ணன், வட்ட கிளை நிர்வாகிகள் மகாலிங்கம், கருப்பசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் காலமுறை ஊதியம், குடும்ப  ஓய்வூதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், உணவு மானியம் உயர்த்தி  வழங்குதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர்   நிறைவேற்ற வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

Related Stories: