கலைஞர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

இளம்பிள்ளை, ஜூன் 9: மகுடஞ்சாவடி ஒன்றியம் தப்பக்குட்டை கிராமம், பண்டார்தான்காடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 99வது பிறந்தநாளை முன்னிட்டு, கோழிப்பூர் கே.சி.சி. பாய்ஸ் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமை வகித்தார். இடங்கணசாலை நகர்மன்ற தலைவர் கமலக்கண்ணன், துணை தலைவர் தளபதி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ஊர் கவுண்டர் கிருஷ்ணமூர்த்தி, திமுக பிரமுகர் அய்யனூர் கோபி ஆகியோர் பரிசு தொகை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் அய்யாவு, பாபு தங்கராஜ், சண்முகம், ஈஸ்வரன், அஜித், மதி, பேரூராட்சி கவுன்சிலர் முரளி, ரமேஷ், மகா, செல்வம், ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: