சேந்தமங்கலம் அருகே ₹3.12 கோடியில் சாலை விரிவாக்க பணி

சேந்தமங்கலம், ஜூன் 9: சேந்தமங்கலம் நெடுஞ்சாலை துறையின் சார்பில், ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் அம்மனபள்ளத்திலிருந்து வெண்டங்கி பாலம் வரை சாலை விரிவாக்க பணி மேற்கொள்ள, ₹3.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அட்மா குழு தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு, சாலை விரிவாக்க பணியை தொடங்கிவைத்தார். பின்னர்  நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பிரனேஷ், ஒன்றியக்குழு தலைவர் மணிமாலா, ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்கொடி செந்தில்குமார், காளியம்மாள் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: