டூவீலர் திருடிய தொழிலாளி கைது

திருச்செங்கோடு, ஜூன் 9: திருச்செங்கோடு பாவடி தெருவை சேர்ந்தவர் பாலு (49). இவர் கடந்த 3ம் தேதி தனது டூவீலரை ஓட்டல் முன் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நாமக்கல் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அது திருடப்பட்டது என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைலாசம்பாளையம் சத்யா நகரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி மணிவாசகம் (36) என்பவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: