ஜமாபந்தியில் 2 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

போச்சம்பள்ளி, ஜூன் 9: போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முதியோர் உதவி தொகை, வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலை வசதி, மயான வசதி வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்த ஜமாபந்தி அலுவலரும், உதவி ஆணையாளருமான பாலகுரு, 2 பேருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கினார். அப்போது, தாசில்தார் இளங்கே மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: