லாரி டிரைவரிடம் ₹1.54 லட்சம் அபேஸ்

தர்மபுரி, ஜூன் 9: பென்னாகரம் அடுத்த சிட்டம்பட்டியைச் சேர்ந்த குப்பன் மகன் மூர்த்தி (23). லாரி டிரைவரான இவரது செல்போனுக்கு, லோன் தருவது தொடர்பாக எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை அவர் கிளிக் செய்த போது, அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டது. அதன்படி மூர்த்தி, தனது வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தார். அடுத்த சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்து ₹1 லட்சத்து 54 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: