திருச்சி முத்தரசநல்லூரில் இன்று பரமாச்சாரியார், சீரடி சாய்பாபா தடாக பிரதிஷ்டை நிகழ்ச்சி

திருச்சி, ஜுன்9: திருச்சி மாவட்டம் ரங்கம் தாலுகா முத்தரசநல்லூர் கிராமத்தில்  சக்தி சங்கர நந்தவனத்தில்  காஞ்சி மகாபெரியவா உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள ஆலயத்தில் நூதன தடாக பிரதிஷ்டை,  பரமாச்சாரியார் விக்ரஹ பிரதிஷ்டை மற்றும்  சீரடி சாய்பாபா விக்ரஹ பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. உலகில் விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி இன்புற்று வாழ்ந்திடவும், மழை வளம் செழிக்கவும், காஞ்சி மகா பெரியவா அனுதினமும் இறைவனை பூஜித்து மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு உபன்யாசங்களையும், அருளாசியும் வழங்கி இறைவனிடத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில்  காஞ்சி மஹா பெரியவா உத்தரவின்படி  சக்தி சங்கர நந்தவனத்தில் பரமாச்சாரியார், சீரடி சாய்பாபா தடாக பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக இன்று (9.6.2022) வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த திருக்குள திருப்பணிகள் மற்றும் குருவாயூரப்பன், ஐயப்பன் பரமாச்சாரியார், சீரடி சாய்பாபா பிரதிஷ்டை வைபவங்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு இறைவன் அருளை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த அரிய புண்ணிய வைபவத்தில் தங்களால் இயன்ற பொருள் உதவியும் பண உதவியோ அளிக்கலாம். இந்த நன்கொடைகளுக்கு 80ஜி வருமான வரி விலக்கு உண்டு. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விழாவில் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற முத்தரசநல்லூர் கிராமவாசிகள்,  பரமாச்சாரியார் பக்தகோடிகள்,  சங்கராச்சாரியார் பக்தகோடிகள், மற்றும் மெய்யன்பர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.விழா ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

Related Stories: