கொரடாச்சேரி ஒன்றியத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு ஆய்வு

நீடாமங்கலம், ஜூன் 9: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழக முதல்வரின் கனவு திட்டமாகிய எண்ணும் எழுத்தும் 3ம் நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை நேற்று மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முனைவர் கலைச்செல்வி, வட்டார கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தா ஆிகயோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் 97 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: