மன்னார்குடி அருகே 7 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் குடிமைபொருள் வழங்கல் டிஎஸ்பி ஆய்வு

மன்னார்குடி, ஜூன் 9: மன்னார்குடி அருகே மூவாநல்லூர் உள்ளிட்ட 7 இடங்களில் இயங்கும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தஞ்சை சரக புட்செல் டிஎஸ்பி சரவணக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மன்னார்குடி அலகு சார்பில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டாரங்களில் 53 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், மன்னார்குடி அடுத்த மூவாநல்லூர், பருத்திக்கோட்டை, எடகீழையூர், ராயபுரம், கீழப்பட்டு, சோனாப்பேட்டை, கோவில் வெண்ணி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு தஞ்சை சரக டிஎஸ்பி சரவணக் குமார் தலைமையில் எஸ்எஸ்ஐக்கள் செந்தில்குமார், பழனிக்குமார், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அந்தந்த பகுதி விவசாயிகள் கொண்டு வரும் நெல்களை மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறதா, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகளால் நெல்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும், நெல் கொள்முதலுக்காக விவசாயிகளிடம் இருந்து பணம் பெறப்படுகிறதா, நெல் மூட்டைகளின் எடையளவு சரியாக உள்ளதா என்பது குறித்து ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், பதிவேடுகள் முறையாக கையாளப்படுகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளிடம் இருந்து எந்தவிதமான புகார்களும் வரக்கூடாது என அறிவுறுத்தினர்.

Related Stories: