பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டி- கேசராப்பட்டி சித்தனத்தான் கண்மாயில் மீன்பிடி திருவிழா

பொன்னமராவதி, ஜூன் 9: பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டி-கேசராபட்டி சித்தனத்தான் கண்மாய் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் ஜாதி, மதம் பாராமல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கண்மாயில் குவிந்து பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி மீன்களோடு மீன்களாக துள்ளிக் குதித்து போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத்தொடங்கினர். ஒவ்வொருவர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. இதில் புதுப்பட்டி, கேசராபட்டி, கண்டியாநத்தம், ஆலவயல், உலகம்பட்டி, மைலாப்பூர், அஞ்சுபுளிப்பட்டி, தூத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

Related Stories: