பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி

கரூர், ஜூன் 9: 2022-23ம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. கடந்த மாதமே 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, விரைவில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஜூன் இரண்டாவது வாரம் முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022-23ம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான இலவச பாடநூல்கள் அனைத்து வகுப்புகளுக்கும் கரூர் நகர்மன்ற மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு தற்போது அந்த புத்தகங்கள் அனைத்தும் கரூர் மாவட்ட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார காலத்திற்குள் இந்த புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: