10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்த ஆசிரியர்கள்

சிவகாசி, ஜூன் 8: சிவகாசியில் 10ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.சிவகாசி, திருவில்லிபுத்துார் கல்வி மாவட்டத்தில் உள்ள 600 ஆசிரியர்கள் சிவகாசி எஸ்.எச்.என்., பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணியில் கடந்த 1ம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.இந்நிலையில் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நேற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை காலம் கடத்தாமல் விரைந்து அமல்படுத்த வேண்டும். வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வை, நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை 1:25 ஆக மாற்றி அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து தேர்வு தாள் திருத்தினர்.மாவட்ட தலைவர் அமுதன் கூறுகையில், அரசு எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காலம் தாழ்த்தும் பட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்

Related Stories: