பசுமை முதன்மையாளர் விருது

கூடலூர், ஜூன் 8: கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரிக்கு பசுமை முதன்மையாளர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார். சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் 100 பேருக்கு தமிழக அரசின் சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பணியாற்றியதற்காக கம்பம் ஸ்ரீஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரிக்கு பசுமை சாம்பியன் விருது கிடைத்தது. தேனியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், இவ்விருதினை, கலெக்டர் முரளீதரனிடமிருந்து கல்லூரி முதல்வர் டாக்டர் ரேணுகா பெற்றுக்கொண்டார். இத்துடன் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.  கல்லூரி செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ,  இணைச்செயலர் வசந்தன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோபால கிருஷ்ணன், சுப்பிரமணியன், பொன்னுராம், சக்திவடிவேல், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்திப் பாராட்டினர்.

Related Stories: