மாவட்ட ஊராட்சி கவுன்சில் கூட்டம்

தேனி, ஜூன் 8: தேனி மாவட்ட கலெக்டர் வளாக மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக் சேர்மன் பிரீதா நடேஷ் தலைமை வகித்தார்.  மாவட்ட ஊராட்சி செயலர் ராஜி மாவட்ட ஊராட்சி துணை சேர்மன் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது 30 தீர்மானங்கள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தின் போது, தேனி மாவட்ட ஊராட்சி 15வது மத்திய நிதி குழு மானிய நிதி 2022-23ம் ஆண்டிற்கு வரையறுக்கப்பட்ட நிதியின் கீழ் ஆண்டிபட்டி பெரியகுளம் போடி உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூபாய் ஒரு கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் வாய்க்கால், தார் சாலை அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: