அம்மனுக்கு காணிக்கை

கமுதி, ஜூன் 8: கமுதி அருகே நீராவி கிராமத்தில் ராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோயிலில் சக்தி கரகம் எடுத்து கத்தி போடுதல் நேற்று மாலை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து உடல் முழுவதும் சந்தனம் பூசி நந்தவனத்தில் இருந்து சக்தி கரகம் எடுத்து, செளடாம்பிகை அம்மன் தங்களுடன் வருமாறு அழைத்து செல்லும் வகையில் இளைஞர்கள், பெரியவர்கள் தங்கள் உடலில் நெஞ்சு மற்றும் கைகளில் கத்தி கொண்டு தன்னை தானே வெட்டி கொண்டு ரத்த காணிக்கை கொடுக்கும் வகையில் கத்தி போடும் விழா நடந்தது.இன்று பொங்கல் வைத்து வழிபடுதல், முளைப்பாரி திருவிழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவாங்கர் உறவின்முறையார் செய்திருந்தனர்.

Related Stories: