பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பழநி, ஜூன் 8: பழநி  நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த வாரங்களில் வெயில்  வாட்டி வதைத்து வந்தது. மேலும் பொது வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல்  காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில்  கடந்த சில தினங்களாக பழநி பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பழநி  பகுதியில் வீசி வந்த அனல் காற்று நீங்கி குளிர்காற்று வீசுகிறது. மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பழநி  பகுதியின் குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் அணைகளுக்கு  நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 65 அடி உயரம் உள்ள  பாலாறு- பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 43.93 அடியாக உள்ளது. அணைக்கு  விநாடிக்கு 235 கனஅடி நீர் வருகிறது. 24 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.  அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 12 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 67  அடி உயரம் உள்ள வரதமாநதி அணையின் தனது முழுக்கொள்ளளவை எட்டியது. இதனால்  அணைக்கு வரும் 106 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.   அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 3 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது.      80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 61.47 அடியாக உள்ளது.  அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர் வருகிறது. 11 கனஅடி நீர்  வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 14 மில்லிமீட்டராக  பதிவாகி உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் இந்த ஆண்டும்  விவசாயம் நல்லபடியாக நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Related Stories: