தெடாவூர் பேரூராட்சியில் 30 ஆண்டுகள் பழமையான தொட்டி இடித்து அகற்றம்

கெங்கவல்லி, ஜூன் 8: கெங்கவல்லி அடுத்த தெடாவூர் பேரூராட்சியில், கடந்த 1989-1990ம் ஆண்டு 9வது வார்டு பழைய மந்தவெளி பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. சுமார் 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த தொட்டி மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் வேலிடம் முறையிட்டனர். இதையடுத்து, அவர் நேரில் ஆய்வு செய்து தொட்டியை பார்வையிட்டார். இதையடுத்து, நேற்று மாலை அந்த நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நீர்த்தேக்க தொட்டியை கீழே சாய்க்கப்பட்டது.

Related Stories: