ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

நாமக்கல், ஜூன் 8:நாமக்கல் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ அகிலன் மற்றும் போலீசார் நேற்று காலை எலச்சிப்பாளையம் அருகே கொன்னையார் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுமார் 1 டன் ரேஷன் அரிசியை ஆம்னி வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தி வந்த மல்லசமுத்திரம் அருகே எம்.மேட்டுபாளையத்தை சேர்ந்த டிரைவர் தனபால்(39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: