கல்லூரி மாணவி மாயம்

சேந்தமங்கலம், ஜூன் 8: எருமப்பட்டி பேரூராட்சி ஜீவானந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்(50). கட்டிட மேஸ்திரியான இவருக்கு, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் நிஷாந்தினி(21). நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி கடைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி சென்ற நிஷாந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜ் எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ சுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

Related Stories: