ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக வழிபாடு

தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரி எஸ்வி ரோடு அபய ஆஞ்சநேயர் கோயிலில் 7வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்கார சேவையும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர்கள் வாசுதேவன், பாலாஜி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: