தீர்த்தக்குட ஊர்வலம்

தர்மபுரி, ஜூன் 8: தர்மபுரி அருகே செட்டிக்கரை ஊராட்சிக்குட்பட்ட நீலாபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து விழா குழுவினர்களுக்கு கங்கணம் கட்டுதல் நடந்தது. நேற்று காலை ஏராளமான பெண்கள் தீர்த்தகுடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நாளான 9ம் தேதி காலை 7.30 மணிக்கு 4ம் கால பூஜையை தொடர்ந்து காலை  மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நீலாபுரம் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தது.

Related Stories: