வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி, ஜுன் 8: திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதி சர்வீஸ் சாலையில் கடந்த மாதம் 10ம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2000 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வழக்கில் சாகுல்ஹமீது மகன் தாஜிதின் (23) என்பவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தாஜிதின் மீது திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள தாஜிதினிடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணையை போலீசார் வழங்கினர்.

Related Stories: