நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடிக்கு 142நாள் சிறை

திருச்சி, ஜுன் 8: திருச்சி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்டவர் பன்னாடை (எ) அக்பர்கான் (33) என்பவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இதை தடுப்பதற்காக, கோட்டை இன்ஸ்பெக்டர் அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை ரவுடி அக்பர்கான் தாக்கல் செய்தார். இருப்பினும் நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி மீது கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 142 நாட்களை பன்னாடை(எ) அக்பர்கான் சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து ரவுடி (எ) அக்பர்கான் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: