கிரேன் இயந்திரத்தின் பேட்டரியை திருடியவர் கைது

பல்லடம், ஜூன் 7: பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மேலாளராக வினோத்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நிறுவன வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கிரேன் வண்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பேட்டரியை யாரோ திருடிச்சென்றுவிட்டதாக பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரனை நடத்தி சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகன் கார்த்திக்யை (27) கைது செய்து அவரிடமிருந்து பேட்டரியை பறிமுதல் செய்து கார்த்திக்யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: