பாலக்காடு மாவட்டத்தில் பால் பண்ணை விவசாயத்தில் ஆர்வமுள்ள இளம்தலைமுறைக்கு அதிக கடன்

பாலக்காடு:  கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பிளாக் பஞ்சாயத்துக்குட்பட்ட மணியில்பரம்பு பால்ப்பண்ணைக் கூட்டுறவு சங்கம் சார்பில் பால் விவசாயினர் குடும்பத்தினர் சங்கமம், வைக்கோல் பெயிலி யூனிட்டை கேரள பால் வள நலவாரியத்துறை அமைச்சர் ஜெ.சிஞ்சுராணி தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில் ‘பசுமாடுகள் வளர்ப்பதுக்குறித்தும், அவற்றை எப்படி பராமரித்து என்பது குறித்தும் இ-டாகிங் திட்டத்தை மாநில முழுவதும் விரிவுப்படுத்தப்படும். அதிகப்படியான பால் உற்பத்தி செய்பவர்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்’ என்றார்பின்னர் வைக்கோல் பெயிலி யூனிட் டிராக்டர், பிக்கப் வேன் ஆகியவற்றை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பினுமோள் தலைமை தாங்கினார். சிறந்த விவசாயி  மகளிர் அமைப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கும் சால்வை அணிந்து அமைச்சர் கவுரிவித்தார். 2021-22 நிதியாண்டு மில்க்ஷெட் திட்டத்தின் மூலமாக 24 லட்சம் ரூபாய் செலவீட்டில் இந்த யூனிட் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories: