பாலகொலா ஊராட்சியில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மரக்கன்று

மஞ்சூர்: கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பாலகொலா ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பாலகொலா ஊராட்சிகுட்பட்ட காத்தாடிமட்டம்  பகுதியில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது.  பாலகொலா ஊராட்சி தலைவர் கலையரசி தலைமை  தாங்கினார். மாவட்ட திமுக பிரதிநிதி முத்து, பாலகொலா ஊராட்சி கவுன்சிலர்கள்  சுப்ரமணி, விஜயா, ராஜேஸ்வரி, புஷ்பாம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  வனத்துறை சார்பில் குந்தா ரேஞ்சர் சீனிவாசன், வனவர்கள் ரவிக்குமார்,  பரமசிவம் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர். தொடர்ந்து கருணாநிதி  பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்  நடவு செய்யப்பட்டது.

Related Stories: